சிங்கப்பூரில் விசா முடிவடைந்த நிலையில், அங்கிருந்து 'பிரத்யேக' விமானம் ஒன்றில் தாய்லாந்து சென்றிருந்தார் கோட்டாபய ராஜபக்ச. அத்துடன், தாய்லாந்திலும் அவருக்கு பாதுகாப்புடன் கூடிய தங்குமிட வசதியை அந்நாட்டு அரசு செய்து கொடுத்திருக்கிறது.
இந்நிலையில், கோட்டாபயவுக்கு பிரத்யேக விமானமொன்றை அரசே ஒழுங்கு செய்து கொடுத்ததாகவும் அதற்கான பணத்தினை இலங்கை அரசே செலுத்தியதாகவும் விபரம் வெளியிட்டுள்ளார் அமைச்சர் பந்துல குணவர்தன.
அது, அரசாங்கத்தின் 'கடமை' எனவும் அவர் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment