புதிய அரசை பொறுப்பேற்பதற்கும் அதற்கான ஆதரவைத் திரட்டுவதிலும் சமகி ஜன பல வேகய மும்முரமாக ஈடுபட்டு வரும் நிலையில், ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ள எந்தவொரு நபரையும் சேர்த்துக் கொள்ளப் போவதில்லையென தெரிவிக்கிறார் திஸ்ஸ அத்தநாயக்க.
ஜனாதிபதி பதவி விலகியதும், பிரதமர் அதற்கடுத்து வரும் 30 நாட்களுக்கு அப்பதவியை வகிக்க முடியும் என்கின்ற போதிலும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பதவி விலகத் தயார் என தெரிவித்துள்ள நிலையில், புதிய அரசொன்றை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையிலேயே திஸ்ஸ இவ்வாறு தெரிவித்துள்ளமையும், ரணிலின் கையெழுத்தை போலியாக ஒப்பமிட்ட குற்றத்தின் பின்னணியில் திஸ்ஸ சிறைவாசம் அனுபவித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment