பசில் ராஜபக்ச, அஜித் நிவாத் கபரால் மற்றும் முன்னாள் நிதியமைச்சின் செயலாளர் ஆட்டிகல ஆகியோர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதிக்குமாறு கோரி உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2015 ஜனாதிபதி தேர்தல் தோல்வியின் பின், இரவோடிரவாக வெளியேறி பரபரப்பை உருவாக்கிய பசில், நாளைய தினம் கோட்டாபய இராஜினாமா செய்யவுள்ள நிலையில், இன்று வெளியேற முனைந்து, விமான நிலையத்தில் ஏற்பட்ட எதிர்ப்பின் பின்னணியில் தடுக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மனுவை 14ம் திகதி உடனடியாக விசாரிக்குமாறும் இது அவசர தேவையெனவும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment