புதிய பிரதமரை நியமியுங்கள்; ரணில் உத்தரவு - sonakar.com

Post Top Ad

Wednesday 13 July 2022

புதிய பிரதமரை நியமியுங்கள்; ரணில் உத்தரவு

 


ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் ஏற்றுக்கொள்ளும் புதிய பிரதமர் ஒருவரை நியமிக்க நடவடிக்கையெடுக்குமாறு சபாநாயகருக்கு உத்தரவிட்டுள்ளார் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.


புதிய அரசொன்று நியமனம் பெற்றதும் தாம் பதவி விலகத் தயார் என ரணில் முன்னர் அறிவித்திருந்த நிலையில், தற்போது கோட்டா நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில் பதில் ஜனாதிபதியாகியுள்ளார்.


சிங்கப்பூரில் புகலிடத்தைப் பெற்றுக் கொண்டதும் கோட்டாபய ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இராஜினாமா அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை கோட்டா விடுமுறையில் சென்றுள்ள நிலையில் ரணில் பொறுப்பில் இருப்பதாகவே கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment