பெரமுன 'தலைவர்' ஒதுக்கப்பட்டார் - sonakar.com

Post Top Ad

Friday, 22 July 2022

பெரமுன 'தலைவர்' ஒதுக்கப்பட்டார்

 ரணில் விக்கிரமசிங்கவின் புதிய அமைச்சரவையில் ஜி.எல் பீரிஸ் முற்றாக ஒதுக்கப்பட்டுள்ளார். பெரமுனவின் தலைவராகத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் ஜி.எல் அக்கட்சியில் இருக்கும் புத்தி ஜீவிகளுள் ஒருவர் என  அடையாளப்படுத்தபபடுகிறார்.


எனினும், புதிய ஜனாதிபதி தேர்வின் போது டலஸ் அழகப் பெருமவையே கட்சி சார்பில் நியமிப்பதாகவும் அவரையே ஆதரிப்பதாகவும் அறிவித்த ஜி.எல். - சஜித் அணியினருடன் கை கோர்த்திருந்தார்.


இந்நிலையில், புதிய அமைச்சரவையில் அலி சப்ரியிடம் வெளியுறவுத்துறையை கையளித்துள்ள ரணில், ஜி.எல். பீரிசை முற்றாக ஒதுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment