டலஸ் அழகப்பெரும ஜனாதிபதியானதும் சஜித் பிரேமதாச பிரதமராவார் எனவும் அதற்கு பொதுஜன பெரமுன முழு ஒத்துழைப்பை வழங்கும் எனவும் தெரிவிக்கிறார் அக்கட்சியின் சம்பிரதாய தலைவர் ஜி.எல். பீரிஸ்.
தமது கட்சி, ரணிலை ஆதரிக்கும் என அறிவித்ததோடு பெரமுன செயலாளர் முடங்கிப் போயுள்ள நிலையில், பெரும்பாலான கட்சி உறுப்பினர்கள் டலஸை ஆதரிப்பதாகவும், அவர் வெற்றி பெற்றதும் சஜித் பிரதமராவார் எனவும் ஜி.எல். விளக்கமளித்துள்ளார்.
இந்நிலையில், ரணிலின் வெற்றி வாய்ப்பைக் குறைப்பதற்கான வியூகத்தினூடாக பெரமுன தொடர்ந்தும் ஆட்சியிலிருப்பதை போராட்டக்காரர்களும் அனுமதிக்க நேர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment