சஜித் பிரேமதாச - டலஸ் இணைவினையடுத்து முஸ்லிம் கட்சித் தலைவர்களும், மனோ கணேசனும் தமது ஆதரவும் டலசுக்கே என அறிவித்துள்ளனர்.
முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் இருவரையும் தவிர்த்து, ஏனையோரை மாத்திரமே சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று நிபந்தனையிட்டிருந்த அதே கட்சி உறுப்பினர்களுடன் ரவுப் ஹக்கீமும் ரிசாத் பதியுதீனும் கை கோர்க்கவுள்ள நிலையில், மீண்டும் சாணக்கிய அரசியல், சந்தர்ப்பவாத அரசியல், காற்றுள்ள போது தூற்றிக் கொள்ளும் அரசியல் வியாக்கியானங்களும் பகிரப்பட்டு வருகின்றன.
ஆட்சியதிகாரத்தில் உள்ளவர்களின் போக்கை மாற்றவென ஆரம்பித்த மக்கள் போராட்டம் ஈற்றில் ராஜபக்சக்களையும் ரணிலையும் விரட்டினால் போதும் என்று குறுகி நிற்பதால் இலங்கையின் அரசியல் பயணம் மீண்டும் பழைய பாதையிலேயே தொடரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment