ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உடைத்து ராஜபக்ச குடும்பத்தினரின் அதிகார வேட்கைக்காக உருவாக்கப்பட்ட பொதுஜன பெரமுன சிதைவை சந்திக்க ஆரம்பித்துள்ளது.
தற்போதைய நாடாளுமன்றில் அதிக ஆசனங்களைக் கொண்ட கட்சியாக இருக்கின்ற போதிலும் தற்சமயம், தலைமைத்துவம் அற்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதால் ஏலவே பசில் - வியத்மக முறுகலால் பிளவுற்றிருந்த மொட்டுக் கட்சி மேலும் பிளவடைந்து வருகிறது.
புதிய ஜனாதிபதி தேர்வில் தற்போது கருத்து மோதல் ஏற்பட்டுள்ளதுடன் டலஸ் அழகப்பெருமவை ஆதரிப்பவர்கள் கட்சியால் ஓரங்கட்டப்படும் நிலை உருவாகியுள்ளது. எஞ்சியிருக்கும் ஜனாதிபதியின் பதவிக் காலத்தை ரணிலிடம் கையளிப்பதன் ஊடாக தொடர்ந்தும் ஆட்சியதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ளவே கட்சியின் பெரும்பாலானோர் விரும்புகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment