தேர்தலை நடாத்த அழுத்தம் தரப் போகிறோம்: SJB - sonakar.com

Post Top Ad

Wednesday, 27 July 2022

தேர்தலை நடாத்த அழுத்தம் தரப் போகிறோம்: SJB

 தேர்தலை நடாத்துமாறு அரசுக்கு அழுத்தம் கொடுக்கப் போவதாக தெரிவிக்கிறது பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பல வேகய.


அரசின் பொறுப்பான திட்டங்களுக்கு ஆதரவளிக்கப் போவதான முன்னர் தெரிவித்திருந்த போதிலும், மக்கள் போராட்ட தொடர்ச்சி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டடோரின் கைது, பாதுகாப்பு படை கெடுபிடிகளின் பின்னணியில், தற்போது தேர்தல் தொடர்பில் ஆர்வம் அதிகரித்து வருகிறது.


இந்நிலையில், தமக்குத் தேவையான நிர்வாகத்தை தெரிவு செய்வதற்கான வாய்ப்பினை மக்களுக்கு வழங்குவதற்கான தருணம் இது என சமகி ஜன பல வேகய தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment