விலகிச் செல்லுங்கள்; பொறுப்பேற்கிறோம்: அநுர - sonakar.com

Post Top Ad

Wednesday 6 July 2022

விலகிச் செல்லுங்கள்; பொறுப்பேற்கிறோம்: அநுர

 


பிரதமர் பதவியைப் பொறுப்பெடுத்து ஆறு மாதங்களுக்குள் பிரச்சினைகளுக்குத் தீர்வைத் தர ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசாநாயக்க தயார் என்றால் தாம் பதவி விலகத் தயார் என ரணில் விக்சிரமசிங்க தெரிவித்ததற்கு பதிலளித்துள்ளார் அநுர.


பிரச்சினைகளின் 'அடிப்படைகளை' இனங்கண்டுள்ளதாகவும் அவற்றை மாற்ற ஆறு மாத காலம் போதுமானது எனவும், பொறுப்பேற்கத் தாம் தயாராகவே இருப்பதாகவும் தெரிவிக்கின்ற அவர், அதற்கு ஏதுவாக ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலகியாக வேண்டும் என தெரிவித்துள்ளார்.


ரணிலுக்கோ தமக்கோ பிரதமர் பதவியில் வீற்றிருக்க மக்கள் ஆணையில்லையெனவும் தெரிவிக்கினற அவர், நம்பிக்கையிழந்துள்ள அரசில் 'ஆள்' மாற்றத்திற்கு உடன்பட முடியாது எனவும் முற்றாக விலகிச் செல்லும் படியும் கேட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment