கோட்டா பேசியதும் ஆளனுப்பிய புட்டின் - sonakar.com

Post Top Ad

Thursday 7 July 2022

கோட்டா பேசியதும் ஆளனுப்பிய புட்டின்

 



இலங்கையின் எரிபொருள் பிரச்சினைக்கு தாம் உதவ விரும்பிய போதிலும், முறையாக யாரும் அணுகவில்லையென ரஷ்யா முன்னர் தெரிவித்திருந்தது.


இந்நிலையில், தாம் ரஷ்ய அதிபரை தொடர்பு கொண்டு தமக்கு உதவுமாறும், மொஸ்கோ - கொழும்பு விமான சேவையை மீள ஆரம்பிகுமாறும் வினயமாக வேண்டிக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பகிரங்கமாக அறிவித்துள்ளதையடுத்து உடனடியாக இரு பிரதிநிதிகளை நேரடி பேச்சுவார்த்தைக்காக அனுப்பி வைத்துள்ளார் ரஷ்ய அதிபர் புட்டின்.


உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலையடுத்து சர்வதேச மட்டத்தில் எரிபொருள் சர்ச்சை உருவாகியுள்ள அதேவேளை, இலங்கையின் பொருளாதாரம் சீரற்ற முகாமைத்துவத்தால் அதாள பாதாளத்தில் வீழ்ந்துள்ளது. நாட்டை மீட்கப் போவதாக கூறிய ரணிலிடமும் எதுவித திட்டமும் இல்லையென தம்மிக குற்றஞ்சாட்டியுள்ள போதிலும் தனது பதவிக்காலத்தை நிறைவு செய்யாமல் விலக முடியாது என்று கூறியுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் தாமதத்தையடுத்து ரஷ்ய பக்கம் சாய்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment