பெரமுன ஆதரவில் ஜனாதிபதியாகியுள்ள ரணில் விக்கிரமசிங்க, தினேஷ் குணவர்தனவை பிரதமராக நியமித்த கையோடு பாதுகாப்பு செயலாளர் பொறுப்பை மீண்டும் கமல் குணரத்னவிடம் கையளித்துள்ளார்.
சட்ட - ஒழுங்கை நிலை நாட்டுவதற்கான பொறுப்பை முப்படையினரிடம் ஒப்படைத்ததையடுத்து காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் அடக்குமுறைக்குள்ளாகியுள்ளதுடன் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், புதிய அரசை நியமிப்பதில் ரணில் மும்முரமாக ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment