வெளிநாட்டு 'எண்ணை' நிறுவனங்களை கவர முஸ்தீபு - sonakar.com

Post Top Ad

Tuesday 28 June 2022

வெளிநாட்டு 'எண்ணை' நிறுவனங்களை கவர முஸ்தீபு

 இலங்கையின் எரிபொருள் விநியோகத்தின் 90 வீதத்தினை அரசு சார் பெற்றோலிய கூட்டுத்தாபனமும் 10 வீதத்தினை இந்தியன் ஒயில் நிறுவனமும் கையாண்டு வரும் நிலையில் எண்ணை உற்பத்தியில் ஈடுபடும் வெளிநாட்டு நிறுவனங்கள் இலங்கையில் வர்த்தகத்துக்கு அழைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.


இப்பின்னணியில் வெளிநாட்டு எண்ணை தயாரிப்பு நிறுவனங்களுடன் நீண்ட கால வர்த்தக ஒப்பந்தங்களைக் கைச்சாத்திடவும், அதனூடான அந்நிய செலாவணியை எரிபொருள் கொள்வனவுக்காக ஒதுக்குவதற்குமான முன்மொழிவுக்கு அமைச்சரவை இணங்கியுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


ஏலவே,. மத்திய கிழக்கு நிறுவனங்கள் இலங்கையில் வேரூன்றப் போவதாக சடூக வலைத்தளங்களில் பரவலான தகவல்கள் பரிமாறப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment