அதிவேக நெடுஞ்சாலைகள் ஊடான வருவாய் 50 வீத வீழ்ச்சியைக் கண்டிருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது நெடுஞ்சாலை பராமரிப்பு முகாமைத்துவ பிரிவு.
நாட்டில் நிலவும் எரிபொருள் பற்றாக்குறையின் பின்னணியிலேயே வாகன போக்குவரத்து குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக கோட்டா அரசு கடும் பிரயத்தனம் செய்து வருகின்ற போதிலும், எதிர்பார்த்த கடன் வசதிகள் கிடைக்காமையால் பொருளாதாரம் மேலும் நலிவடைந்துள்ளதுடன் எரிபொருள் பற்றாக்குறை தீவிரமடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment