முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் கபராலுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
மத்திய வங்கி ஆளுனராக பதவி வகித்த காலத்தில் அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக கபராலுக்கு எதிராக பௌத்த துறவியொருவரினால் தொடுக்கப்பட்டிருந்த வழக்கிலேயே இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்த நிலையில் 10 மில்லியன் ரூபா சரீரப் பிணையில் கபரால் விடுவிக்கப்பட்டுள்ளமையும் ஏலவே வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment