திரும்பவும் 'போட்டிக்கு' வர மாட்டேன்: ஜனாதிபதி - sonakar.com

Post Top Ad

Monday 6 June 2022

திரும்பவும் 'போட்டிக்கு' வர மாட்டேன்: ஜனாதிபதி

 ஐந்து வருடங்கள் ஜனாதிபதியாக இருப்பதற்குத் தமக்கு மக்கள் ஆணை வழங்கியுள்ள நிலையில், அதனை இடை நடுவில் கைவிட்டுச் செல்ல முடியாது என்கிறார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச.


எனினும், திரும்பவும் ஜனாதிபதி பதவிக்கு தான் போட்டியிடப் போவதில்லையெனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.


முழுமையாக பெயில் ஆகிய ஒரு நபராகத் தாம் விட்டுச் செல்ல விரும்பவில்லையென அவர் தெரிவிக்கின்ற அதேவேளை, கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகக் கோரி இலங்கையர்கள் தொடர்ந்தும் போராட்டங்களை நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment