பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது தனிப்பட்ட பிரச்சினைகளை பேசுவதற்கு இடமில்லாமல் அல்லோல கல்லோலப் பட்டு வரும் நிலையில் ரணில் விக்கிரமசிங்கவிடன் நல்லுறவை வளர்க்க முயற்சிகள் இடம்பெற்று வருகிறது.
மே 9ம் திகதி வரை மிகவும் உறுதியான நிலைப்பாட்டில் இருந்த மஹிந்த ராஜபக்ச, அப்பாவி மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையின் பின்னணியில் சொந்த நாட்டிலேயே தலைமறைவாக இருந்து, பலத்த பாதுகாப்புடன் நடமாடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். இந்நிலையில், தற்போது அவர் அரசியல் நடவடிக்கைகளிலிருந்தும் ஒதுங்கி வருவதுடன் பெரமுன சகாக்களையும் சந்திப்பதை தவிர்த்து வருகிறார்.
இச்சூழ்நிலையில், தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காகவே அரசியலில் தங்கியிருக்கும் நபர்கள் இருக்கும் பதவிக்காலத்தில் பயனடைய வழியின்றி, ரணில் விக்கிரமசிங்கவிடம் தொடர்புகளை வளர்த்துக்கொள்ள முயற்சிப்பதாக அறியமுடிகிறது. இதேவேளை, 21ம் திருத்தச் சட்டத்தை எதிர்க்க முனைந்த பசில் அணியினரும் தற்போது தலைமையின்றி தவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment