போராட்டக்காரர்கள் 'இரத்தக் கறை' படிந்தவர்கள்: மஹிந்த - sonakar.com

Post Top Ad

Friday 10 June 2022

போராட்டக்காரர்கள் 'இரத்தக் கறை' படிந்தவர்கள்: மஹிந்த

 கோட்டா கோ கம மற்றும் மைனா கோ கம உட்பட நாட்டில் தமது குடும்பத்தை பதவி விலகக் கோரி போராட்டம் நடாத்துபவர்களின் கைகளில் இரத்தக் கறை படிந்துள்ளது என்கிறார் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச.


போராட்டம் அமைதியாக நடந்ததாக யாராலும் சொல்ல முடியாது என மே 9 வன்முறையில் உயிரிழந்த அமரகீர்த்தி அத்துகோறளவுக்கான தனது நாடாளுமன்ற இரங்கல் உரையில் அவர் தெரிவித்துள்ளார்.


இதேவேளை, மே 9 வன்முறையைத் தூண்டிய குற்றச்சாட்டில் மஹிந்தவின் நெருங்கிய சகாக்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் ஜோன்ஸ்டன் தலைமறைவாக இருந்து நேற்றைய தினம் 'பிணை' பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment