பிரதமராகவும் - ஜனாதிபதியாகவும் கூட தயார்: சம்பிக்க - sonakar.com

Post Top Ad

Saturday, 11 June 2022

பிரதமராகவும் - ஜனாதிபதியாகவும் கூட தயார்: சம்பிக்க

 


இக்கட்டான இச்சூழ்நிலையில் நாட்டை வழி நடாத்துவதற்கு தான் பிரதமர் பதவியைப் பொறுப்பேற்கத் தயாராக இருப்பதாகவும் தேவைப்பட்டால் ஜனாதிபதியாகவும் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கிறார் சம்பிக்க ரணவக்க.


திட்டமிட்ட வகையில் நாட்டை அபிவிருத்தி பாதையில் கொண்டு செல்லத் தன்னால் முடியும் எனவும் தெரிவிக்கின்ற அவர், தற்போது சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் என தெரிவித்து வருகிறார்.


இதேவேளை, தனது பதவிக்காலம் முடியும் வரை விட்டு விலகப் போவதில்லையென ஜனாதிபதி ஏலவே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment