நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் - மக்கள் போராட்டம் - sonakar.com

Post Top Ad

Friday 6 May 2022

நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் - மக்கள் போராட்டம்

 நாடு தழுவிய ரீதியில் இன்று பொது மக்களால் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் பெரும்பாலான நகரங்களில் வர்த்தக நடவடிக்கைகள் முற்றாக முடங்கியுள்ளது.


இந்நிலையில், கண்டி - கொழும்பில் மக்கள் போராட்டங்களும் இடம்பெறுகிறது. அத்துடன், ஹர்த்தாலை ஆதரித்து இன்று நாடாளுமன்ற அமர்வினைப் புறக்கணித்துள்ளதாக ஜே.வி.பி அறிவித்துள்ளது.


தமது அதிருப்தியை வெளியிடுவதற்கு மக்கள் பல்வேறு நூதனமான போராட்டங்களை, அமைதியாக முன்னெடுத்து வருகின்ற நிலையில், அரசாங்கம் அதிகாரத்தைக் கொண்டு அடக்கும் நடவடிக்கைகளையும் முடுக்கி விட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment