ட்ரோனில் பார்த்து திட்டமிட்ட தாக்குதல்: தினேஷ் - sonakar.com

Post Top Ad

Saturday, 21 May 2022

ட்ரோனில் பார்த்து திட்டமிட்ட தாக்குதல்: தினேஷ்

 அண்மையில் பெரமுன அரசியல் சண்டியர்கள் மற்றும் நிராயுதபாணிகளாக காலிமுகத்திடலில் போராடிக் கொண்டிருந்த மக்களைத் தாக்கியவர்கள் மீது பதில் தாக்குதல் நடாத்தப்பட்டமை திட்டமிட்ட செயற்பாடு என்கிறார் தினேஷ் குணவர்தன.


அமைச்சர்களின் வீடுகள் மற்றும் பாதைகள் ட்ரோன் தொழிநுட்பத்தைக் கொண்டு நன்கு அவதானிக்கப்பட்டு, திட்டமிடப்பட்டே தாக்குதல் நடாத்தப்பட்டிருப்பதாக அவர் விளக்கமளித்துள்ளார்.


இந்நிலையில், நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்று இச்சம்பவங்கள் தொடர்பில் விசாரணைநடாத்த வேண்டும் எனவும் அவர் தெரிவிக்கின்றமையும் வன்முறைச் சம்பவத்தின் பின்னணியில் இதுவரை பலர் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment