மனைவியுடன் நாட்டை விட்டு வெளியேறிய யோசித - sonakar.com

Post Top Ad

Monday 9 May 2022

மனைவியுடன் நாட்டை விட்டு வெளியேறிய யோசித

 இன்று மாலை அமைச்சரவை சந்திப்பையடுத்து மஹிந்த ராஜபக்சவிடமிருந்து முக்கிய அறிவிப்பொன்று வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்பு உருவாக்கப்பட்டுள்ள நிலையில், அவரது புதல்வர் யோசித தனது மனைவி சகிதம் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


நாட்டை சூறையாடிய ராஜபக்ச குடும்பத்தினரை பதவி விலகுமாறு கோரி இளைஞர் சமுதாயம் போராட்டத்தில் குதித்திருந்த நிலையில், இன்று நிராயுதபாணிகளான போராளிகள் மீது ஆளுங்கட்சி காடையர்கள் தாக்குதல் நடாத்தி மக்களைக் காயப்படுத்தி, கூடாரங்களை எரியூட்டியிருந்தனர்.


ஏலவே, அரசியல் ஸ்தீரத்தன்மையில்லாத இலங்கை தொடர்பில் வெளிநாடுகள் கரிசணை வெளியிட்டுள்ள நிலையில் இன்றைய அராஜக தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment