இன்றைய தினம் மஹிந்த ராஜபக்ச தனது பதவியை இராஜினாமா செய்யப் போவதாக வார இறுதியில் வெகுவான பிரச்சாரங்கள் இடம்பெற்றிருந்த நிலையில் தனது ஆதரவளர்களை சந்தித்த பிரதமர், அது குறித்து எந்தப் பேச்சுமின்றி ஜனாதிபதியை பலப்படுத்துவதே தமது திட்டம் என தெரிவித்துள்ளார்.
69 லட்சம் மக்களின் அபிலாசைக்கு தலைசாய்த்து, ஜனாதிபதி தனது பதவியைத் தொடர்வதற்கு ஏதுவான வேலைத்திட்டங்களே முன்னெடுக்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.
அரசில் இணைவதற்கு யாரும் முன் வரத் தயாரில்லையென அவர் தெரிவிக்கின்ற அதேவேளை மஹிந்த - கோட்டா இல்லாத இடைக்கால அரசுக்குத் தாம் தயார் என எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment