'உரு' ஏறிய பின் நான் வேறு ஞானக்கா - sonakar.com

Post Top Ad

Sunday, 22 May 2022

'உரு' ஏறிய பின் நான் வேறு ஞானக்கா

 கோட்டாபய ராஜபக்சவுக்கு தான் அரசியல் ஆலோசனை வழங்குவதில்லையென தெரிவிக்கிறார் ஞானக்கா.


வேர்வை சிந்திய தனது கடின உழைப்பால் கட்டியெழுப்பப்பட்ட தனது பொருளாதாரம் மே 9 தாக்குதலினால் முற்றாக சிதைந்து போயுள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர், ஜனாதிபதியின் தனிப்பட்ட விடயங்களுக்கு தான் ஆலோசனை வழங்குவதில்லையெனவும் தெரிவிக்கிறார்.


எனினும், தனக்கு 'உரு' ஏறிய பின் அங்கு நடக்கும் உரையாடல் அல்லது வழங்கப்படும் ஆசீர்வாதம் தொடர்பில் தனக்கு எதுவும் ஞாபகம் இருப்பதில்லையெனவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment