பிரதமர் பதவி போட்டியில் ரணில் முன்னிலை - sonakar.com

Post Top Ad

Thursday 12 May 2022

பிரதமர் பதவி போட்டியில் ரணில் முன்னிலை

 


கடன் சுமையில் சிக்கி, பொருளாதார நெருக்கடியினால் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டங்களை நடாத்தி வரும் சூழ்நிலையில் பிரதமர் பதவியை ரணிலிடம் ஒப்படைக்க ஜனாதிபதி பேச்சுவார்த்தைகளை நடாத்தி வருகிறார்.


நேற்றைய சந்திப்பையடுத்து ரணிலுடன் மேலதிக பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்ற அதேவேளை, பெரமுன தரப்பிலிருந்தும் ரணிலுக்கு ஆதரவு திரட்டப்படுகிறது. இதேவேளை, சமகி ஜன பல வேகயவில் சஜித் பிரேமதாசவின் தற்போதைய நிலைப்பாட்டுக்கு உடன்படாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் ரணிலை ஆதரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இச்சூழ்நிலையில், ஏனையோரை விட ரணிலே பிரதமராகும் தகுதியை வளர்த்துக் கொண்டுள்ளமையும், படு தோல்வியடைந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் ஊடாகவே ரணில் நாடாளுமன்ற உறுப்பினராகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment