பதவி: மேலும் சிதைவடையும் சுதந்திரக் கட்சி - sonakar.com

Post Top Ad

Thursday 26 May 2022

பதவி: மேலும் சிதைவடையும் சுதந்திரக் கட்சி

 நிமல் சிறிபால, மஹிந்த அமரவீரவைத் தொடர்ந்து மேலும் சில சு.க உறுப்பினர்கள் அமைச்சுப் பொறுப்புக்களைப் பெற்றுக்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


பெரமுன பலவீனமடைந்ததன் பின்னணியில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி புத்துயிர் பெற்றிருந்த போதிலும், மீண்டும் பதவி மோகத்தால் அக்கட்சி சிதைவடைந்து வருகிறது.


இந்நிலையில், மேலும் பல இராஜாங்க அமைச்சுக்களை 'அள்ளி' வழங்க ஜனாதிபதி திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment