கோட்டா கோ கம 50: போராளிகளை விரட்ட கண்ணீர்ப் புகை - sonakar.com

Post Top Ad

Saturday, 28 May 2022

கோட்டா கோ கம 50: போராளிகளை விரட்ட கண்ணீர்ப் புகை

 கோட்டா கோ கம, தொடர் போராட்டத்தின் 50 வது நாளின் பின்னணியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒன்று கூடலை, பொலிசார் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் செய்து கலைக்க முயன்றுள்ளனர்.


உலக வர்த்தக மைய கட்டிடமருகே போராளிகள் ஒன்று கூடி அரச விரோத கோசங்களை முன் வைத்து வந்த நிலையில், வீதித்தடைகளை ஏற்படுத்தியிருந்த பொலிசார் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் செய்துள்ளனர்.


போராளிகள் தம்மோடு 'பேசுவதற்கு' ஏதுவாக புதிய இணைய வசதியை செய்து கொடுத்திருப்பதாக நேற்றைய தினமே பிரதமர் ரணில் அறிவித்திருந்த நிலையில் இந்நடவடிக்கை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment