இன்றைய தினம் அமைச்சரவை சந்திப்பில் 21ம் திருத்தச் சட்டத்துக்கான வரைபு சமர்ப்பிக்கப்படாவிட்டால் தாம் பதவியை கைவிடப் போவதாக ஹரின் பெர்னான்டோ தெரிவித்திருந்த நிலையில், இறுதி நேரத்தில் குறித்த வரைபு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
எனினும், 3 மாத காலங்களுக்குள் 21ம் திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கா விட்டாலும் தான் பதவி விலகுவது திண்ணம் என தெரிவிக்கிறார் ஹரின்.
பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் அமைச்சராகியுள்ள ஹரின், நிலைமையை சீர் செய்ய தீவிர முயற்சி எடுத்து வருகின்ற அதேவேளை, தாம் தொடர்ந்தும் மக்கள் போராட்டத்தை ஆதரித்தே செயற்படுவதாக தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment