காலிமுகத்திடலில் அமையப் பெற்றுள்ள கோட்டா கோ கம பிரதேசத்தையண்டிய பகுதியில் பொலிஸ் வாகனங்கள் குவிக்கப்பட்டு வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.
ஏலவே கடவத்தை இராணுவ முகாம் ஒன்றுக்குள் போராட்ட களத்தில் ஒலிக்கும் கோசங்களை சிப்பாய்களுக்கு பயிற்றுவிக்கும் காணொளியொன்று வெளியாகியுள்ளதுடன் ஜனாதிபதிக்கு ஆதரவாக ஊர்வலம் சென்றவர்கள் ஏலவே கோட்டா கோ கமவுக்குள் புகுந்துள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது பொலிஸ் வண்டிகள் குவிக்கப்பட்டு வருகின்றமை அரசின் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்த அதிருப்தியை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment