அவசர கால சட்டம்: எதிர்க்க ஆயத்தமாகும் சட்டத்தரணிகள் சங்கம் - sonakar.com

Post Top Ad

Saturday 2 April 2022

அவசர கால சட்டம்: எதிர்க்க ஆயத்தமாகும் சட்டத்தரணிகள் சங்கம்

 


நாட்டில் அவசர கால சட்டத்தினை பிரகடனப்படுத்தியுள்ள ஜனாதிபதியின் செயற்பாடு மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.


இந்நிலையில், இது குறித்து ஆராய்ந்து அதற்குரிய நடவடிக்கையில் இறங்குவதற்கு சட்டத்தரணிகள் சங்கம் தயாராவதாக அதன் தலைவர் சாலிய பீரிஸ் தகவல் வெளியிட்டுள்ளார்.


மீரிஹனயில் போராடி கைதான இளைஞர்களை விடுவிக்க சாலிய பீரிஸ் மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணிகள் தலைமையில் சுமார் 400 சட்டத்தரணிகள் களத்தில் குதித்திருந்ததோடு, குறித்த இளைஞர்களுக்கு கை தட்டி உற்சாகப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment