இப்போதே நாட்டை விட்டு கிளம்புங்கள்: சம்பிக்க - sonakar.com

Post Top Ad

Saturday 2 April 2022

இப்போதே நாட்டை விட்டு கிளம்புங்கள்: சம்பிக்க

 


அதிகாரத்தை நாடாளுமன்றிடம் கையளித்து விட்டு கோட்டாபே ராஜபக்ச தனது தாய் நாடான அமெரிக்காவுக்கு கிளம்புவதற்கு இதுவே தருணம் என்கிறார் சம்பிக்க ரணவக்க.


நாட்டு மக்கள் தாம் படும் அவஸ்தைகளைத் தாங்க முடியாமல் வீதியிலிறங்கிப் போராடி வருகின்ற நிலையில், தமது குடும்ப நலனை முன்நிறுத்தி இன்னும் அதிகாரத்தை தக்க வைக்கப் போராடக் கூடாது என அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.


சர்வாதிகாரத்தைப் பிரயோகித்து மக்களின் குரலை நசுக்குவதற்கு முயலாமல் கோட்டாபே உடனடியாக நாட்டை விட்டு கிளம்புவதே நல்லது என அவர் தெரிவிக்கின்ற அதேவேளை, நேற்று முதல் நாட்டில் அவசர கால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment