கட்சிக்குத் தெரியாமல் அமைச்சுப் பதவியைப் பெற்றுக் கொண்ட நசீர் அஹமதுவை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலிருந்து உடனடியாக நீக்கியுள்ளதாக தெரிவிக்கிறார் அக்கட்சியின் தலைவர் ரவுப் ஹக்கீம்.
இன்று கூடிய கட்சி முக்கியஸ்தர்கள் சந்திப்பில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அரசுக்கு ஆதரவளித்த ஏனையோர் தொடர்பில் 'விசாரணை' நடாத்தப்படுவதாகவும் அவர்களால் தரப்பட்டுள்ள விளக்கம் 'ஆராயப்படுவதாகவும்' ஹக்கீம் விளக்கமளித்துள்ளார்.
பெரும் முதலீட்டில் நாடாளுமன்ற உறுப்பினராகிய நசீர் அஹமது, தன்னை நிலை நிறுத்துவதற்காக கடும் சிரமப்பட்டு அமைச்சுப் பதவியைப் பெற்றுக்கொண்டுள்ளமையும் இச்செயற்பாடு பெரும்பாலான இலங்கை முஸ்லிம்களால் வெறுக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
1 comment:
முஸ்லிம்கள் அதீத மனவேதனையில் உள்ளனர்.
Post a Comment