ஜப்பான்: மடவளை நலன்புரி சங்கம் மீள் ஆரம்பம் - sonakar.com

Post Top Ad

Friday 1 April 2022

ஜப்பான்: மடவளை நலன்புரி சங்கம் மீள் ஆரம்பம்

 


ஜப்பானில் வசிக்கும் மடவளையை சேர்ந்த சகோதரர்களினால் ஆரம்பிக்கப்பட்ட   MADAWALA WELFARE SOCIETY JAPAN   என்ற அமைப்பு 01.04.2022 (வெள்ளிக்கிழமை) அன்று  மீள் தொடங்கி வைக்கப்பட்டது.


இந்நிகழ்விற்கு சுமார் 80 கும் மேற்ப்பட்ட மடவளையை சேர்ந்த சகோதரர்கள் கலந்துகொண்டதுடன் ஏற்கனவே இருந்த  நிர்வாகக் குழுவுடன் இன்னும் சில அங்கத்தவர்களை இணைத்து சுமார் 25 பேர் கொண்ட குழு  ஒன்றும் யியமிக்கப்பட்டது.


இக்கூட்டத்தில் பல விடயங்கள்  பற்றி கலந்தாலோசிக்கப்பட்டதுடன் எதிர்வரும் தினங்களில் இன்ஷா அல்லாஹ் எம் அமைப்பினால் எமதூர் மற்றும் எமது சமூகத்துக்கான பல நலன் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக குறித்த அமைப்பினர் தெரிவிக்கின்றனர்.


- MWSJ 

No comments:

Post a Comment