பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை: மஹிந்த - sonakar.com

Post Top Ad

Tuesday, 26 April 2022

பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை: மஹிந்த

 எக்காரணங் கொண்டும் தாம் பதவி விலகப் போவதில்லையென தமது கட்சிக்காரர்களை ஊக்குவிக்கும் வகையில் பிரகடனம் செய்துள்ளார் மஹிந்த ராஜபக்ச.


பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் நடந்த சந்திப்பில் வைத்தே இவ்வாறு தெரிவித்துள்ள அவர், நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முகங் கொடுக்கத் தயார் எனவும் சவால் விடுத்துள்ளார்.


மஹிந்தவை 88 பேர் அளவிலேயே ஆதரிப்பதாக கம்மன்பில கூறியிருந்ததை 'பொய்' எனக் கூறி மஹிந்த தரப்பு மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment