அரசில் இணைந்திருந்து விலகிக் கொண்ட அனைத்து கட்சிகளையும் மீண்டும் ஒன்றிணைய அழைப்பு விடுத்துள்ளார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச.
இப்பின்னணியில் தற்போதைய பிரதமர் உட்பட அமைச்சரவையை கலைத்து விட்டு மீண்டும் அனைத்து கட்சிகளும் இணைந்த அமைச்சரவையை உருவாக்கப் போவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
விமல் - கம்மன்பில - வாசு கூட்டணி தொடர்ந்தும் மஹிந்தவை ஆதரிப்பதால், மீண்டும் மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்கும் வகையில் இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. எனினும், கிடைத்த சந்தர்ப்பத்தில் அமைச்சுப் பதவிகளில் அமர்ந்து கொண்ட முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலைமை கேள்விக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment