கொலைக் கலாச்சாரம்: ஐ.நா - அமெரிக்கா கவலை - sonakar.com

Post Top Ad

Wednesday, 20 April 2022

கொலைக் கலாச்சாரம்: ஐ.நா - அமெரிக்கா கவலை

 அரசின் நிர்வாகத் திறமையற்ற செயற்பாட்டினால் நாடு எதிர் நோக்கி வரும் பொருளாதாரச் சிக்கல்கள் அடித்தட்டு மக்களை வெகுவாக பாதித்துள்ள நிலையில் போராட்டங்கள் வெடித்துள்ளன.


இந்நிலையில், நேற்றைய தினம் ரம்புக்கன பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம், ஏலவே தமது ஆட்சிக்காலத்தில் பொது மக்கள் போராட்டங்ளில் துப்பாக்கிப் பிரயோகம் செய்யும் வரலாறு கொண்ட அரசின் நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது.


பாரபட்சமற்ற விசாரணை நடாத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ள அதேவேளை தாம் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதை பொலிசார் ஏற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment