இரகசிய இராணுவம் இயங்குகிறதா? சஜித் கேள்வி! - sonakar.com

Post Top Ad

Wednesday 6 April 2022

இரகசிய இராணுவம் இயங்குகிறதா? சஜித் கேள்வி!

 நேற்றைய தினம் நாடாளுமன்றம் அருகே போராட்டம் நடாத்திக் கொண்டிருந்த மக்களை நோக்கி பதிவிலக்கம் இல்லாத மோட்டார் சைக்கிளில், சீருடையுடன் முகமூடியணிந்து வந்த ஆயுததாரிகள் குறித்து கேள்வியெழுப்பியுள்ளார் சஜித் பிரேமதாச.


குறித்த நபர்கள் யார் என நாடாளுமன்றுக்கு தெளிவுப்படுத்தப்பட வேண்டும் எனவும், இது அறியப்படாத இரகசிய இராணுவமா? எதற்காக இயங்குகிறது எனவும் அவர் விளக்கம் கோரியுள்ளார்.


இதேவேளை, இலங்கை இராணுவத்தினரின் ஒரு பிரிவினரே இவ்வாறு அங்கு சென்றதாகவும் இராணுவ வீரர்களைத் தடுத்த பொலிஸ் அதிகாரிகளை விசாரிக்குமாறும் இராணுவ தளபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment