அம்பலந்தொட்ட பகுதியில் இடம்பெற்று வரும் மணல் கொள்ளை தொடர்பில் தகவல் சேகரித்து ஒளிப்பதிவு செய்த ஊடகவியலாளர் ஒருவரை மிரட்டி அனைத்த ஆவணங்களையும் ஒப்படைக்குமாறு துமிந்த சில்வா அச்சுறுத்தல் விடுத்ததாக குறித்த நபர் முறையிட்டுள்ளார்.
ஹிரு தொலைக்காட்சி அதிபரின் சகோதரன் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டே இவ்வாறு மிரட்டல் விடுத்ததாக ராகுல் சமந்த என அறியப்படும் ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார். எனினும், குறித்த கைத் தொலைபேசி துமிந்த சில்வாவுடையது என்பதைத் தாம் உறுதி செய்துள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
மரண தண்டனைக் கைதியான துமிந்த, ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் பேரில் விடுவிக்கப்பட்டுள்ள அதேவேளை, அரசியல் ரீதியாக 'பலம்' வாய்ந்த நபராக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment