சு.கவுடன் பேச்சுவார்த்தைக்கு போகும் ஜனாதிபதி - sonakar.com

Post Top Ad

Sunday, 6 March 2022

சு.கவுடன் பேச்சுவார்த்தைக்கு போகும் ஜனாதிபதி

 


பெரமுனவுடன் முறுகல் நிலை முற்றித் தாம் தனியாகப் போட்டியிடப் போவதாகவும் ஆட்சியைக் கைப்பற்றப் போவதாகவும் தெரிவித்து வரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தைக்குத் தயாராகியுள்ளார்.


முன்னாள் ஜனாதிபதி மைத்ரி, தயாசிறி, துமிந்த உட்பட்ட முக்கியஸ்தர்களுடனான சு.க குழுவை வரும் செவ்வாய் 8ம் திகதி ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


பெரமுன அரசு பலமாக இருந்த கால கட்டத்தில் சு.கட்சியினர் பாரிய அளவில் நெருக்கடிகளை சந்தித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment