பசிலிடம் அதிகாரத்தை கையளிக்க வேண்டும்: குட்டியாராச்சி - sonakar.com

Post Top Ad

Saturday 26 March 2022

 பசிலிடம் அதிகாரத்தை கையளிக்க வேண்டும்: குட்டியாராச்சி

 


அரசியல் அனுபவம் இல்லாத கோட்டாபே ராஜபக்சவை விட பசில் ராஜபக்சவே ஜனாதிபதியாக தகுதியானவர் என்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி.


இப்போது கூட, அரசின் அனைவரும் செய்யும் தவறுகளை தனது தோளில் சுமந்து கொண்டு பசில் ராஜபக்சவே தீர்வு தேட முனைவதாக குட்டியாராச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.


கோட்டாபே ராஜபக்ச தொடர்பில் கட்டியெழுப்பப் பட்ட பிம்பம் கலைந்துள்ளதாக அரசியல் மட்டத்தில் பெருமளவு பேசப்படுவதோடு பொது மக்கள் சமூக வலைத்தளங்களில் பாரிய அளவில் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment