பெரமுன - விமல் வீரவன்ச இடையிலான தேனிலவு முடிவுக்கு வந்துள்ள நிலையில் விமல் வீரவன்ச கட்சியின் உறுப்பினர்கள் தமது பதவிகளைத் துறக்க ஆரம்பித்துள்ளனர்.
அண்மையில் ஜயந்த சமரவீர தனது இராஜாங்க அமைச்சு பதவியைத் துறந்த நிலையில் தற்போது உள்ளூராட்சி மற்றும் மாவட்ட அபிவிருத்தி குழுக்களில் 'பதவி' பெற்றிருந்த உறுப்பினர்களும் தமது பதவிகளிலிருந்து வில ஆரம்பித்துள்ளனர்.
இப்பின்னணியில், கொத்மலை பிரதேச சபையின் இணைப்பாளராகப் பணியாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் பியதிஸ்ஸ தமது பதவியை துறந்துள்ளதுடன் 69 லட்ச வாக்காளர்களின் மனச்சாட்சிக்கு விரோதமாக தம்மால் இயங்க முடியாது என விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment