மின்சார கட்டணம் 500% அதிகரிக்கும் அபாயம்; தயாசிறி - sonakar.com

Post Top Ad

Monday 21 March 2022

மின்சார கட்டணம் 500% அதிகரிக்கும் அபாயம்; தயாசிறி

 அத்தியாவாசிய பொருட்கள் விலையுர்வு மற்றும் வாழ்க்கைச் செலவுகள் வெகுவாக உயர்ந்துள்ள நிலையில் மின்சார கட்டணம் விரைவில் 500 வீத உயர்வைக் காணும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளார் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர.


நாட்டின் பொருளாதாரம் கட்டுப்பாடிழந்துள்ள நிலையில் மக்கள் பெருமளவு சிரமங்களை எதிர் நோக்கி வருகின்றனர். எனினும், இது தனியாக அரசின் தவறு மாத்திரமில்லையெனவும் தெரிவிக்கின்ற அவர், உக்ரேன் மீதான ரஷ்ய தாக்குதல் போன்ற சர்வதேச நிகழ்வுகளும் தாக்கம் செலுத்துவதாக தெரிவிக்கிறார்.


இந்நிலையில், மின் கட்டணம் வெகுவாக அதிகரிக்கவுள்ளதாகவும் நாடு மீண்டும் சாதாரண நிலைக்குத் திரும்ப சில வருடங்களாகும் எனவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment