சட்ட விரோத 'வங்கி' ; பெரமுன MP மறுப்பு - sonakar.com

Post Top Ad

Thursday 10 February 2022

சட்ட விரோத 'வங்கி' ; பெரமுன MP மறுப்பு

 


தாம் சட்ட விரோதமாக தனியார் வங்கியொன்றை நடாத்துவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார் பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி.


க.பொ.த உயர்தர பரீட்சையில் தேர்ச்சி பெற்று தொழில்வாய்ப்பின்றி இருப்பவர்களுக்கு உதவுவதற்காக சமுர்த்தி சங்கம் ஒன்றையே முன்னர் நடாத்தியதாகவும், நாடாளுமன்ற உறுப்பினரான பின்னர் அதில் எந்த பதவியிலும் தாம் இல்லையெனவும் விளக்கமளித்துள்ள அவர், சட்டவிரோத வங்கி நடாத்துவதாக தம் மீது பொய்க் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுவதாக தெரிவிக்கிறார்.


நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த விஜேசிறியே குட்டியாராச்சியின் வங்கி தொடர்பில் தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment