மொரட்டுவ: மருத்துவ பீடத்துக்கு குவைத் 'நிதி' - sonakar.com

Post Top Ad

Thursday 10 February 2022

மொரட்டுவ: மருத்துவ பீடத்துக்கு குவைத் 'நிதி'

 


மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்துக்கான உபகரணங்கள் மற்றும் கட்டிட நிர்மாண பணிகளுக்கு குவைத் நிதியத்திலிருந்து கடன் வழங்கப்பட்டுள்ளது.


அரபு பொருளாதார அபிவிருத்திக்கான குவைத் நிதிய பிரதி பணிப்பாளர் அண்மையில் இலங்கை வந்திருந்த போது இதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


இதனைத் தொடர்ந்து குவைத்திடமிருந்து மேலதிக கடன் பெறுவதற்கான முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருவதாக பெரமுன தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment