கருப்பு சந்தை டொலரில் எண்ணை - ஆயுதம்: பசில் - sonakar.com

Post Top Ad

Wednesday, 2 February 2022

கருப்பு சந்தை டொலரில் எண்ணை - ஆயுதம்: பசில்

 


கருப்பு சந்தை டொலரைப் பயன்படுத்தி இலங்கை அரசு வட கொரியாவிலிருந்து ஆயுதம் பெற்றுக் கொண்டதுடன் எண்ணைக் கொள்வனவிலும் ஈடுபட்டதாக தகவல் வெளியிட்டுள்ளார் பசில் ராஜபக்ச.


இறுதி யுத்த காலத்தில் வட கொரியாவிலிருந்து ஆயுதக் கொள்வனவு செய்தமையையே ஊடகம் ஒன்றுடனான பேட்டியின் போது தெரிவித்துள்ள அவர், புறக்கோட்டை சென்று வர்த்தகர்களிடம் பேச்சுவார்த்தை நடாத்தி கருப்பு சந்தையிலிருந்து டொலர் ஒழுங்கு படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.


முன்னர் விக்கிலீக்ஸ் ஊடாக வடகொரியாவிடம் இலங்கை ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்டமை தொடர்பில் தகவல் வெளியாகியிருந்த அதேவேளை 2009க்கு முன்னர் பல கட்டங்களில் இச்செயற்பாடு இடம்பெற்றமை குறித்து பசில் விளக்கியுள்ளார். ஆயினும், அவரது 'பேச்சு' திரிபு படுத்தப்பட்டிருப்பதாக ஜி.எல். பீரிஸ் மீள் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment