உக்ரைன் - ரஷ்ய விவகாரத்தில் இலங்கை நடு நிலை: அரசு! - sonakar.com

Post Top Ad

Friday 25 February 2022

உக்ரைன் - ரஷ்ய விவகாரத்தில் இலங்கை நடு நிலை: அரசு!

 


உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல்கள் மும்முரமடைந்துள்ள நிலையில் இவ்விவகாரத்தில் இலங்கை எந்த தரப்புக்கும் ஆதரவாக செயற்படப் போவதில்லையெனவும் நடு நிலை வகிப்பதாகவும் தெரிவிக்கிறது வெளியுறவுத்துறை அமைச்சு.


பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு யுத்தம் ஆரோக்கியமான வழிமுறையில்லையெனவும் அறிக்கை மூலம் சுட்டிக்காட்டியுள்ள வெளியுறவுத்துறை அமைச்சு, இலங்கை அரசு தமது நிலைப்பாட்டில் தெளிவாக இருப்பதாகவும் தெரிவிக்கிறது.


நேட்டோவில் உக்ரைன் இணைக்கப்படுமேயானால் ரஷ்யா பாரிய அளவில் பாதிக்கப்படும் எனக் கணித்து தன்னிச்சையாக புட்டின் போர் தொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment