சுசிலின் அமைச்சை SBக்கு வழங்க முஸ்தீபு - sonakar.com

Post Top Ad

Sunday 9 January 2022

சுசிலின் அமைச்சை SBக்கு வழங்க முஸ்தீபுபதவி நீக்கப்பட்ட சுசில் பிரேமஜயந்தவுக்கு பதிலாக எஸ்.பி. திசாநாயக்கவை நியமிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


எனினும், இராஜாங்க அமைச்சு பதவி தனக்கு வேண்டாம் என எஸ்.பி மறுத்துள்ளதாக பெரமுன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


திடீரென பதவி நீக்கப்பட்ட சுசிலுக்கு, பிரதமர் அனுதாபம் தெரிவித்துள்ளதோடு பதவி நீக்கப்பட்டது தனக்குத் தெரியாது எனவும் விளக்கமளித்துள்ளமையும் மஹிந்தவின் பிரதமர் பதவியையும் பசில் ராஜபக்ச தனக்குத் தரும்படி அழுத்தம் பிரயோகிப்பதாகவும் அரசியல் மட்டத்தில் நிலவுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment