இல்லாத ஆயுதங்களை மீட்ட பொலிஸ்; வைத்தியரின் மகன்! - sonakar.com

Post Top Ad

Thursday 20 January 2022

இல்லாத ஆயுதங்களை மீட்ட பொலிஸ்; வைத்தியரின் மகன்!

 


பொரளை தேவாலயத்தில் மீட்கப்பட்ட கைக்குண்டின் பின்னணியில் கைது செய்யப்பட்டுள்ள ஓய்வு பெற்ற வைத்தியரின் வீட்டிலிருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிப்பதை மறுத்துள்ளார் அவரது புதல்வரான ஒசல ஹேரத்.


அரசியல் தளத்தில் இயங்கும் ஒசல ஹேரத், கட்டாய ஜனாஸா எரிப்பு விவகாரத்தின் மனுதாரர்களுள் ஒருவராவார். இந்நிலையில், தமது வீட்டிலிருந்து குழந்தையின் விளையாட்டுத் துப்பாக்கிகளை கொண்டு சென்ற பொலிசார், அவற்றை தீவிரவாத ஆயுதங்கள் என தகவல் வெளியிட்டுள்ளமை இட்டுக்கட்டப்பட்ட கதைகள் என  அவர் தெரிவிக்கிறார்.


அத்துடன், இவற்றை நியாயப்படுத்தக் கூடிய தனது வீட்டின் சிசிடிவி பதிவுகளையும் பொலிசார் பலவந்தமாக எடுத்துச் சென்றுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment