நாமலின் 'ஆட்சிக்' கனவு; தயாசிறி சவால்! - sonakar.com

Post Top Ad

Saturday, 15 January 2022

நாமலின் 'ஆட்சிக்' கனவு; தயாசிறி சவால்!மஹிந்த ராஜபக்ச போலன்றி அவரது குடும்பத்தினர் பங்காளிகள் அனைவரையும் பகைத்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கிறார் தயாசிறி ஜயசேகர.


மஹிந்தவிடம் கேட்டால், எத்தனை கூட்டணிக் கட்சிகள் இருந்தாலும் பிரச்சினைகள் உருவானதில்லையென்று பதில் கூறுவார். ஆனால் நாமலோ, எல்லோரையும் வெளியேறுமாறு கூறித் திரிகிறார்.


அவ்வாறு கூறுபவர் எவ்வாறு இந்நாட்டின் ஆட்சியாளர் என்ற இடத்துக்கு வரப் போகிறார் என்று நாங்கள் பார்க்கத் தான் போகிறோம். அவரது கனவை நிறைவேற அனுமதிக்க மாட்டோம் என மேலும் தெரிவித்துள்ளார் தயாசிறி ஜயசேகர.


சு.க  - பெரமுன உறவு மோசமான நிலையை அடைந்துள்ளதுடன் எதிர்வரும் தேர்தல்களில் சு.க தனித்துப் போட்டியிடும் என தெரிவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment