கடந்த வருடம் 1.4 ட்ரில்லியன் ரூபா அச்சிட்டுள்ள அரசு! - sonakar.com

Post Top Ad

Saturday, 15 January 2022

கடந்த வருடம் 1.4 ட்ரில்லியன் ரூபா அச்சிட்டுள்ள அரசு!

 


கடந்த வருடம் இலங்கை மத்திய வங்கி 1.4 ட்ரில்லியன் ரூபா பெறுமதியான நாணயத்தாள்களை அச்சிட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் மத்திய வங்கி ஆளுனர் கபரால்.


இலங்கை வரலாற்றில் இதுவே இந்த அளவு பாரிய தொகை பணம் அச்சிடப்பட்டுள்ளதாகவும் ஏற்றுக்கொண்டுள்ள அவர், அவ்வாறு பணம் அச்சிடப்பட்டிருக்காவிட்டால் இதை விடப் பாரிய நெருக்கடிகளை சந்திக்க நேர்ந்திருக்கும் என்றும் தெரிவிக்கிறார்.


எனினும், இலங்கையின் கடன் பெறும் தகுதி குறைக்கப்பட்டிருப்பது அநீதியானது என்றும் அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment